மீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா? அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி  நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் விஜய். அஜித்,ரஜினி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகை திரிஷா  தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு., ஹிந்தி., கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 திரைப்படமானது காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிகை தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

இவர் பல முறை காதல் விவகாரங்களில் சிக்கியுள்ளார். மேலும் இவர் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து  நிச்சயதார்த்தம் வரை சென்றார். ஆனால், சில காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு த்ரிஷா சிங்கிள் பட் டேக்கன் என்று கூறியுள்ளார். மேலும் திருமணம் குறித்து கேட்டதற்கு தேவைப்படும் பொழுது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.  இதன் மூலம் மீண்டும் த்ரிஷா மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nadikai trisha love contovarsy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal