நடிகர்கள் சம்பள ஏற்ற விவகாரம்: அரசு அதிரடி காட்டுமா.?! - அமைச்சர் பதில்.!  - Seithipunal
Seithipunal


செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  கடம்பூர் ராஜூ, "நடிகர்கள் உடைய சம்பளத்தை குறைப்பது என்பது அவர்களே முடிவு செய்ய வேண்டிய விஷயம். இதில், நேரடியாக அரசு தலையிட்டு கூறுவது சாத்தியமில்லாதது. 

இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கத்தினர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள் கலந்து கொண்டு இது குறித்து பேசி முடிவு எடுக்க வேண்டும். தியேட்டர்கள் திறந்த பின்பாக அங்கிருக்கும் சூழலை பொறுத்து விழாக்கால சிறப்பு அனுமதி வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும். 

கரோனா வைரஸ் தடுப்பூசி கண்டறியப்பட்டு சீக்கிரம் நடைமுறைக்கு வரும் எனும் தகவல் வந்தவுடன் இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தில் அனைவருக்கும் விலையில்லா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதில் கூட அரசியல் செய்து பிழைப்பு நடத்த எண்ணுகிறார். மக்கள் இதனை விரைவில் புரிந்து செயல்படுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister kadambur raju press meet about salry of actors


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->