துளி கூட ஜாடை தெரியல.. மீரா ஜாமினால் அதிர்ந்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில், 'ரன்' படத்தின் மூலம் மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவரின் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் மீரா ஜாஸ்மின்.

தமிழில் விஜய் நடிப்பில் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார்.விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படம் என்றே கூறலாம். நாட்கள் செல்ல செல்ல சினிமாவில் வாய்ப்பும் குறைய தொடங்கியது.

மலையாள நடிகையான இவர் பின்னர் கடந்த 2014 ல் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் கணவருடன் துபாயில் செட்டிலாகிவிட்டது. அங்கே இருந்தவர் சினிமா பக்கமே வரவில்லை.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி மிகவும் குண்டான தோற்றத்துக்கு மாறிய இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் மீரா ஜாஸ்மின்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meera Jasmin slim photos makes shock to fans 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->