தளபதி 67-ல் கார்த்தியின் கதாப்பாத்திரமா.?! அவரே கூறிய மறைமுக செய்தி.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற இந்த திரைப்படத்திற்கு தளபதி 67 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான பூஜை ஏற்கனவே நடைபெற்று விட்டது. ஆனால், இதுவரை படவேலைகள் ஆரம்பித்து விட்டதை பட குழு அறிவிக்கவே இல்லை. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26 -இல் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கார்த்தி நடித்த கைதி படத்தில் அவரது லில்லி கதாபாத்திரத்தை தளபதி 67 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் கொண்டு வரப் போவதாக கூறப்படுகிறது.

 இந்த விஷயம் குறித்து ஏற்கனவே கார்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது இது பற்றி லோகேஷ் கனகராஜிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். தவிர அப்படி ஒன்றும் இல்லை என்று அடியோடு மறுக்கவில்லை. ஆகவே, இந்த கதாபாத்திரம் தளபதி 67-ல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May Karthi Dilli Character In Thalapathy 67


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->