சம்பளம் போதும்ங்க! ஆண்டவர், தலைவரை மிஞ்சிய தளபதி! சிறப்பான சம்பவம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 6000 திரைகளில் வெளியான லியோ, முதல்நாள் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

2023 ஆண்டில் வெளியான ஜவான், ஜெயிலர் உட்பட இந்திய திரைப்படங்களில் அதிக முதல்நாள் வசூலைப் பெற்ற படம் சாதனையையும் லியோ படைத்துள்ளது.

அண்மை காலமாக தமிழ் திரையுலகில் ஒரு படம் செம்ம ஹிட் கொடுத்தால், உடனே படத்தின் நாயகன், இயக்குநர்களுக்கு கார் உள்ளிட்ட பரிசு பொருளை தயாரிப்பாளர் வழங்குவது வழக்கமாகியுள்ளது.

குறிப்பாக கமல்ஹாசன் விக்ரம் பட வெற்றிக்காகவும், கலாநிதிமாறன் ஜெயிலர் பட வெற்றிக்காகவும் இப்படியான பரிசுகளை வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் லியோ பட வெற்றிக்கு பரிசு எதுவும் தேவையில்லை என்று சொல்லி இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஒரு நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவிக்கையில், "மாஸ்டர் படத்தின் வெற்றிக்காக பரிசு தரலாமா என நடிகர் விஜய் சாரிடம் கேட்டேன். ஆனால், அவர் ‘எனக்குதான் சம்பளம் தருகிறீர்களே... அதுவே எனக்கு போதும். தேவையில்லாத பரிசுகள் எதற்கு?’ என்று கேட்டார். 

ஆனாலும் லியோ வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை விஜய் சாரிடம் கேட்பேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமும் என்ன பரிசு வேண்டுமெனக் கேட்பேன்" என்று தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

master leo no gift for vijay


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->