துண்டுதுண்டாக வெட்டியதை மொத்தமாக சேர்த்து ரிலீஸ்... அதிர்ச்சியில் படக்குழு, ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியிருந்த நிலையில், கொரோனா பாதிப்புகள் காரணமாக பட வெளியீடு தள்ளி சென்றது. இந்நிலையில், இறுதியாக பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகியுள்ளது.

திரைப்படங்கள் பொதுவாக வெளியாகும் போது, திருட்டுத்தனமாக படமெடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகும் செயலானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஓ.டி.டி தளங்களில் படங்கள் வெளியிடப்பட்டாலும், அந்த படங்களும் திருட்டுத்தனமாக பல இணையங்களில் வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் திரைப்படத்தின் பல காட்சிகள் படம் வெளியாகும் நாட்களுக்கு முன்னதாகவே இணையத்தில் பரவி படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், பல திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் மற்றும் 100 விழுக்காடு இருக்கையில் அனுமதி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியுள்ளது. 

இந்நிலையில், நேற்று துண்டு துண்டாக மாஸ்டர் திரைப்பட காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில், இன்று முழு திரைப்படமும் வெளியாகியுள்ளதாக தெரியவருகிறது. இதனையறிந்த ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், திரைப்பட குழு சார்பாக இதனை முடக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முழுநீள திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளதா? என்பது தொடர்பான தகவல் உறுதி செய்யப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Master Full Movie Released Social Media


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal