பிரபல இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்.! திரைத்துறையினர் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


மலையாள தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சபரிநாத். அவர் அமலா, மின்னுக்கேட்டு, சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நடிகர் சபரிநாத்துக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இறப்பு மலையாள திரை துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malaiyala serial actor sabarinath passed away


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal