முன்னணி நடிகர்களை ஓரங்கட்டிய 'லவ் டுடே' படத்தின் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே.  இந்தத் திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகியுள்ளார். 

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். காதல், காமெடி, பொழுதுபோக்கு என்று 2 கிட்ஸ் விரும்பும் படமாக வந்துள்ள இந்த ‘லவ் டுடே’ திரைப்படத்தில், நடிகர் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை இப்படம் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் டான் மற்றும் டாக்டரை திரைப்படங்களை விட அதிக வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் அங்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love today movie collected 60 crores


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->