LGM படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார் 'தல' தோனி.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தது. அத்துடன் இவரது முதல் திரைப்படம் தமிழில் தான் என்று கூறப்பட்டது.

இதில் முதல் முதலில் நடிகர் விஜய்யை வைத்து தோனி படம் தயாரிப்பாளர் என்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டது. சூர்யா, அஜித் என்று பல முன்னணி நடிகர்களின் பெயர் அடிபட்டது. இதனிடையே தோனி தயாரிக்கும்  படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

அதன்படி, இந்த படத்திற்கு LGM (Let's Get Married) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவானா மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் MS தோனி தயாரிக்கும் முதல் படமான LGM படத்தின் டீஸரை நாளை இரவு 7 மணிக்கு தோனி மற்றும் சாக்ஷி இருவரும் இணைந்து வெளியிட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LGM movie teaser tomorrow release by MS Dhoni


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->