அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் லியோ படக்குழுவினர்.!
leo movie cannada poster released
அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் லியோ படக்குழுவினர்.!
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தில் தளபதியுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழுவினர் வௌியிட்ட நிலையில், தற்போது கன்னட போஸ்டரையும் வௌியிட்டுள்ளது.
English Summary
leo movie cannada poster released