#BREAKING || பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மருத்துவர்.! - Seithipunal
Seithipunal


பழம் பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து நேற்று பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டர் மூலம் உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சற்று முன்பு வெளியான தகவலில், தொடர் மருத்துவ கண்காணிப்பில் லதா மங்கேஷ்கர் இருந்து வருவதாகவும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மும்பை ப்ரீச்கேண்டி மருத்துவமனை மருத்துவர் பிரதித் சம்தானி தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக லதா மங்கேஷ்கர் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரின் சகோதரி ஆஷா போஸ்லே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lata Mangeshkar IN ICU


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->