இருபது ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் கில்லி - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!  
                                    
                                    
                                   killi movie re rilease 
 
                                 
                               
                                
                                      
                                            சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. அதாவது:- சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷ் நடித்த ‘3’, சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வரவேற்பை பெற்றன.
அந்த வகையில் நடிகர் விஜயின் தமிழ் சினிமாவில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது.

விஜய்யின் ஆக்ஷன், த்ரிஷாவின் க்யூட்னஸ், தரணியின் மேக்கிங், வித்யாசாகரின் சாங்ஸ், பிஜிஎம் என "கில்லி" வேற லெவலில் சொல்லி அடித்தது. அர்ஜுனரு வில்லு, அப்படிப் போடு, கொக்கர கொக்கரக்கோ என்ற கில்லி பாடல்களின் வைப் 20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன. 
இந்த நிலையில், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் மூவியான கில்லி, இப்போது 2கே கிட்ஸ்களுக்கும் ட்ரீட்டாக அமையவுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகிறது. இதற்கான புதிய ட்ரெய்லரும் இன்று வெளியாகிறது.