காணாமல் போன பிரபல நடிகர், கிணற்றில் பிணமாக மீட்பு!  - Seithipunal
Seithipunal


ஜனார்த்தனன் மூழிக்கரா என்பவர் மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர். முத்தப்பன் என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்த அவர், இங்கிலீஸ் மீடியம், காக்‌ஷி அம்மினி பில்லா, மழமேகப்ரவுள், ரமணம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சுமார் 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேரள மாநிலம் தலச்சேரியில் ஜனார்த்தனன் வசித்து வந்தார். இந்த நிலையில் திடீரென ஜனார்த்தன் காணாமல் போனார். அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த கிணறு வலைகொண்டு மூடப்பட்டு இருந்த நிலையில், வலை திறந்து இருந்ததை பார்த்து, உள்ளே எட்டிப்பார்த்தபோது ஜனார்த்தனன் பிணமாக மிதந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினருடன் வந்த காவல்துறையினர், ஜனார்த்தனன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

மரணம் அடைந்த ஜனார்த்தனத்துக்கு 60 வயதானாலும், அவருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரணையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Actor body find in well near his home


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal