எஸ், எஸ், எஸ்ஸ்., இந்தியா ஆஆஆஆ., வெறித்தனமாக கொண்டாடிய நடிகை கஸ்தூரி, ஆனந்த கண்ணீர் விட்டு முதலமைச்சர் நவீனுக்கு நன்றி.!  - Seithipunal
Seithipunal


டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இன்று வெண்கல பதக்கதிற்கான (மூன்றாவது இடம்) ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி அணியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்று, பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

கடந்த 1980 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அணி பதக்கம் வென்று இருப்பதால் நம் இந்திய மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். பதக்கம் வென்றுள்ள இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "வெண்கலப் பதக்கம்  வெல்வதற்கான சிறந்த ஆட்டம் இது. 41 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆண்கள் ஹாக்கி போட்டிகளில் 12 வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். நான் உறுதியாக நம்புகிறேன், டோக்கியோ 2020 ல் இந்த வெற்றியுடன், இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது." என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகை கஸ்த்தூரி தனது மகிழ்ச்சியை அப்படியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் அந்த பதிவில், "ஆம்.., நான் ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன். 41 வருட காத்திருப்பு, இந்தியா...., பதக்கம் வென்றுள்ளது. முன்னேறு இந்தியா" என்று தெரிவித்து நடிகை கஸ்துரி, இந்தியா வீரர் ஸ்ரீஜேஷ் அவர்களுக்கு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், மற்றும் ஒரு பதிவில், "ஆம். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களுக்கும், ஒடிசா மக்களுக்கும் இந்தியா மிகவும் கடன்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஹாக்கிக்கு உங்கள் பார்வை மற்றும் ஆதரவுக்கு நன்றி." என்று தெரிவித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KASTURI SHANKAR say about india hockey victory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->