பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.? குடும்ப புகைப்படம் வைரல்.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கம்பம் மீனா. தற்போது துணை நடிகையாக இருக்கின்ற இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் நடந்தது. 

அதன் பின்னர் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. தனது குடும்ப வறுமை நிலை காரணமாக எல்ஐசி ஏஜென்டாக கம்பம் மீனா பணிபுரிந்துள்ளார். மிகவும் தைரியமாக வலம் வந்த அவர் அப்போதே அந்த சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலமான பெண்ணாக இருந்துள்ளார். 

இதன் பின்னர் பாரதிராஜாவுடைய தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் கம்பம் மீனாவை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார். கிராமத்து வழக்கு மொழியில் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் மீனாவுக்கு இந்த சீரியல் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. 

இதன் பின்னர் அவர் வெள்ளித்திரையில் சில திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை கம்பம் மீனா தமிழில் 25 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்து வருகின்றார். இவரது வாழ்க்கை வரலாறு பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் தற்போது அமைந்துள்ளது. 

இந்த நிலையில், தற்போது மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் தியேட்டர் சென்று அரண்மனை 3 படம் பார்த்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவரது மகளும் இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasthuri daughter photo viral 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->