60 ரூபா இல்லாம., அப்பாவ கடைசியா கூட பாக்கல - எம்.எல்.ஏ கருணாஸ் உருக்கம்.!  - Seithipunal
Seithipunal


நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "சூரரை போற்று படத்தில் நாயகன் கதாபாத்திரமான மாறன் அவருடைய தந்தையின் மரணத்திற்கு போக முடியாமல் அவஸ்தை பட்டது போல என்னுடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. 

அப்பொழுது ராஜா அண்ணாமலை மன்றத்தில் என்னுடைய முதல் சபா கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. நானும் என்னுடைய நண்பருமான பாலாஜியும் இணைந்து அந்தக் கச்சேரியை நடத்தினோம். 

தற்போது பாலாஜி உயிருடன் இல்லை அந்த நிகழ்ச்சி நடத்த போகின்ற நேரத்தில் என்னுடைய தந்தை புதுக்கோட்டை மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. படத்தில் மாறனுக்கு விமானத்தில் செல்ல 6,000 ரூபாய் தேவைப்பட்டது. ஆனால் எனக்கு பேருந்தில் செல்ல 60 ரூபாய்தான் தேவைப்பட்டது. 

அதற்கு கூட வழி இல்லை. என்னுடைய தந்தைக்கு காரியம் செய்ய முடியாமல் போனது. அதுபோல சூரரைப்போற்று படத்தில் நிறைய காட்சிகள் பலருடைய வாழ்க்கைக்கும் ஒத்துப்போகும். படமாகவே பார்த்தால் இது ஒரு எமோஷனல் படம். இது போன்ற படங்கள் அபூர்வமாகத்தான் வெளிவரும்." என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karunas emotionally speech about his father death


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal