காந்தாரா படத்தை நேரடையாக ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் - பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.! - Seithipunal
Seithipunal


கன்னடத்தில் காந்தாரா எனும் திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் தெய்வ நர்த்தகர்களின் துயரம் குறித்து விரிவாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமாக  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் ரூ. 170 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தன்னுடைய குடும்பத்துடன் சென்று காந்தாரா திரைப்படத்தை பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த கங்கனா ரணாவத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், நான் என்னுடைய குடும்பத்துடன் வந்து காந்தாரா திரைப்படத்தை பார்த்தேன். நடிகர் ரிஷப் செட்டியின் நடிப்பு என்னை மிகவும் வியக்க வைத்தது. அவருடைய மிரட்டலான நடிப்பு இன்னமும் என் கண் முன்னால் தான் இருக்கிறது. இதை நான் மறப்பதற்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். மிகவும் சிறந்த ஒரு சினிமாவை பார்த்த திருப்தி எனக்கு கிடைத்துள்ளது. மேலும், இந்த படத்தை நேரடியாக ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kangana Ranaut speech about kanthara movie


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->