அஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம்.! சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


'வணக்கம் சென்னை' திரைப்படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி புதிய படம் ஓன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு மிர்ச்சி சிவா-பிரியா ஆனந்தை வைத்து 'வணக்கம் சென்னை' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கிருத்திகா உதயநிதி. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதற்கு பின் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், கொரனோ தொற்று பாதிப்பின் காரணமாக தடைபட்டது. தற்போது அந்த படத்திற்கான கதை, திரைக்கதையை முடித்துள்ளார் கிருத்திகா உதயநிதி.

தற்போது இந்த படத்தில் மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த அஸ்வின் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கவுள்ள கதாப்பாத்திரங்கள், தயாரிப்பாளர் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalithas jeyaram new movie


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal