ஒளிப்பதிவாளருடன் மோதல்: படப்பிடிப்பில் இருந்து விலகல்! ஜோஜு ஜார்ஜ் விளக்கம்!  - Seithipunal
Seithipunal


மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில் நடிகர் தனுஷ் உடன் ஜகமே தந்திரம், பபூன் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இவர் 'பனி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் அபிநயா, சீமா, சாந்தினி, ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் வேணு பணியாற்றி வந்தார். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒளிப்பதிவாளர் வேணு அநாகரிகமாக நடந்து கொண்டதால் ஜோஜு ஜார்ஜுக்கும் வேணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தகவல் வெளியானது. 

மேலும் வேணுவை படத்தில் இருந்து நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரை வைத்து படத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இது தொடர்பாக ஜார்ஜ் தெரிவித்திருப்பதாவது, ''மலையாள சினிமாவில் நான் மதிக்கக்கூடிய பல நபர்களில் ஒருவர் வேணு. 

நாங்கள் அவரை நீக்கவில்லை. அவராகத்தான் சென்றார். இன்றும் அவர் மீது எனக்கு அதே மரியாதை உண்டு. இந்த படத்தை இயக்கச் சொன்னதே வேணு சார் தான். தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joju George speech goes viral


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->