ஜெகமே தந்திரம் டீசரில் இந்த விஷயத்தை கவனிச்சிங்களா.!? படு ஆத்திரத்தில் தனுஷ் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் இணைந்து தயாரிக்கின்ற, ஜகமே தந்திரம் திரைப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். 

படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்து விட்ட நிலையில் கிரீஸ் விவகாரத்தில் நடிகர் தனுசுக்கும் தயாரிப்பாளர் தரப்பும் பிரச்சினைகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஜகமே தந்திரம் முழுக்க முழுக்க லண்டனில் அந்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டு இருப்பதால் 16 கோடி ரூபாய் மானியமாக கிடைக்க உள்ளது. 

நெட்பிளிக்ட்ஸில் வெளியாகும் ஜெகமே தந்திரம்.?! படக்குழு போட்ட பக்கா பிளான்.!  - Seithipunal

திரையரங்குகளில் வெளியானால் தான், இந்த மானியம் என்று கூறப்பட்ட விதி. கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, நெட்பிளிக்ஸ்-ல் தயாரிப்பாளர் படத்தை பெரும் தொகைக்கு விற்று விட்டார். இது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

இயக்குனரும் நடிகரும் அந்த படத்தை தியேட்டரில் வெளியிட விரும்பினர்.தற்போது ஜெகமே தந்திரம் திரைப்படத்தை OTT யிலேயே வெளியிட படக்குழு இறுதி முடிவை எட்டியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இத்தகைய சூழலில், இன்று வெளியான டீசரில் தனுஷின் பெயரே இடம்பெறாமல் வெளியிடப்பட்டு இருப்பது தற்போது கவனிக்கப்பட்டு அனைவரையும் எரிச்சலடைய செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jegame thandhiram teaser 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal