“வயது வெறும் எண் தானா?” — செய்தியாளர் கேள்விக்கு பிரசன்னாவின் கலகலப்பான ரியாக்ஷன்! சினேகா பதில் எமோஷனல்!
Is age just a number Prasanna lively reaction to a reporter question Sneha emotional response
நடிகை சினேகா திரையில் சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்தாலும், விஜய் நடித்த கோட் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்களை சந்தித்தார். தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி, புடவை பிராண்ட் சினேகாலயா நடத்துவது, தனியார் சேனல் ரியாலிட்டி ஷோவில் நீதிபதியாக இருப்பது என பல துறைகளில் பிஸியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சினேகாலயா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகாவிடம்,“நீங்கள் எப்போதுமே ராணியாக இருக்கிறீர்கள்… வயது என்பது வெறும் எண் தானா?”என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார்.
இந்த கேள்வி கேட்டவுடன் பக்கத்தில் இருந்த கணவர் பிரசன்னா சிரித்தபடி,“ஏய்… நாக்கை கடித்து கொன்றுவிடுவேன்!”என்பது மாதிரியான கலகலப்பான முகபாவனை, கையை காட்டும் சைகை செய்தார்.அந்த ரியாக்ஷன் அங்கே இருந்தவர்களைச் சிரிக்க வைத்ததோடு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேள்விக்குப் பதிலளித்த சினேகா,“மனதில் சந்தோஷமாக இருந்தால்தான் முகத்தில் தெரியும். அதற்காக பிரசன்னாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்,”என்று கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் ‘புன்னகை அரசி’ என ரசிகர்களை கவர்ந்த சினேகா—இன்றும் அதே கவர்ச்சியுடனும், அழகுடனும் இருப்பதற்கான காரணத்தை தனது குடும்ப ஆதரவாக குறிப்பிட்டது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
Is age just a number Prasanna lively reaction to a reporter question Sneha emotional response