"சிம்பிளான பொண்ணா நான்" - அதிதி பாலன்.! அசத்தல் இன்டர்வியூ - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் அதிதி பாலன். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அருவி திரைப்படத்தில் நடித்த சிறப்பு கதாபாத்திரத்தின் மூலம்  ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். நிவின் பாலியுடன் மலையாள படம் ஒன்றில் இணைந்து நடித்த இவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் யோகி பாபு நடிக்கும்  கரு மேகங்கள் காத்திருக்கின்றன என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் தான் வழக்கறிஞர் மற்றும் சமூக  செயல்பாட்டாளராக  இருப்பதால்  தான் சீரியஸான ஆள் கிடையாது என்றும்  பழகுவதற்கு எளிமையான நபர் என்றும் தெரிவித்து இருக்கிறார். தன்னிடம் எந்த விஷயம் குறித்தும் உரையாடலாம்  எனவும் கூறியிருக்கிறார்.

அருவி திரைப்படத்திற்கு பிறகு ஏற்பட்ட கால இடைவெளி அதுவாக அமைந்தது என குறிப்பிட்ட இவர் பெண்களை மையப்படுத்தி வரும் கதாபாத்திரங்களை தொடர்ந்து வந்ததால் சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். சில படங்கள் வேறு சில காரணங்களால் தள்ளிப் போனதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் காத்திருக்கின்றன. திரைப்படம்  மிகவும் வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட ஒரு திரைப்படம் என்பதால் அதில் நடிக்க தீர்மானித்ததாக கூறினார். மேலும் இயக்குனர் பாரதிராஜாவுடன் இணைந்து நடித்தது மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

im a simple girl aditi balan amazing interview


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->