வைகோ சினிமாவுக்கு வந்திருந்தால் நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்...!- தம்பி ராமையா புகழாரம் - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பல்துறை திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் 'தம்பி ராமையா'. இவர் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் 'வைகோ' குறித்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டதாவது,"வைகோ சினிமாவிற்கு வந்திருந்தால், நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார். அவரது கண் புருவம், குரல், கம்பீரம், மூக்கின் அழகு – இவற்றுக்கு இணையாக யாரும் இருக்க முடியாது.

அமிதாப் பச்சனையே ஓரமாக நிறுத்தியிருப்பார். ஆனால் அவர் தேர்வு செய்தது அரசியல் துறை.மேடையில் சிறு குறிப்புகளும் இல்லாமல், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய அவரது உரை, அப்போது இருந்த ரஜினிகாந்தையே வியக்க வைத்தது.

இன்று வைகோவை நான் தம்பி துரையின் பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கிறேன். ‘நான் பெரியாரையும் வணங்குவேன், பெருமாளையும் வணங்குவேன்’ என்று அவர் கூறுவது தான் உண்மையான ஆன்மீக வளர்ச்சி,” எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If Vaiko had come to cinema he only superstar country Praises Thambi Ramaiah


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->