இந்த முறையும் விஷால் ஏமாற்றி விட்டாரா ...? ரசிகர்கள் கொந்தளிப்பு...!
Has Vishal cheated this time too Fans turmoil
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான 'விஷால்' சில மாதங்களுக்கு முன்னாடி,நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என்று அறிவித்து ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதனிடையே பல நடிகைகளுடன் அவ்வப்போது விஷால் காதல் கொண்டுள்ளார் என கிசுகிசுக்கள் பரவலாக பேசப்பட்டது.இந்நிலையில்,பல்வேறு காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது வருகிற செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே விஷால், அண்மையில் முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார்.
மேலும்,ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.இதில் நடிகர் விஷால் அவர்களுக்கு இன்று 48-வது பிறந்தநாள். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, விஷால் திருமணம் அறிவித்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
English Summary
Has Vishal cheated this time too Fans turmoil