'கமல் 233' படத்துக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசன் இந்தியன் - 2 படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் 'கமல் 233' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனம்  சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

'ரைஸ் டூ ரூல்' என்ற படத்தின் தலைப்பு அரசியல் படம் என்பதை உறுதிசெய்கின்றன. முன்னதாக, விவசாய சங்க நிர்வாகிகளுடன் கமல் மற்றும் வினோத் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் இந்த படம் விவசாயிகளின் பிரச்னையைக் கொண்டு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காக கமல்ஹாசன் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் படம் ராணுவ பின்னணியில் உருவாகும் என தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், 'கமல் 233' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harris Jayaraj music composer Kamal 233 film


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->