ஹெச்.வினோத்- கமல் இணையும் படம் பற்றி ஹெச்.வினோத் கொடுத்த தகவல்.! - Seithipunal
Seithipunal


சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக நிறைய ரசிகர்களை பெற்றவர் தான் இயக்குனர் எச்.வினோத். இவர் அதன்பின் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி இருந்தார். 

அதன் பின் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற எச்.வினோத் முதன் முதலில் மேற்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். அடுத்தடுத்து வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களையும் வினோத் இயக்கினார். சமீபத்தில் வெளியான துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. 

அதிகபடியாக சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் எச்.வினோத் ஆக்ஷன் படங்களை தான் இயக்கி இருப்பார். இவர் தற்போது நகைச்சுவை ஜானரில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்ததாக தனுஷின் படத்தை வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால் தனுஷை வைத்து அவர் படம் பண்ணுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட எச்.வினோத்திடம் கமல் சாருடனான படத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எச் வினோத் நான் இன்னும் கமல் சாரிடம் கதையே கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

H Vinoth and Kamal movie update


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->