பிரபல பாலிவுட் நடிகரின் மகன் நடித்த திரைப்படத்திற்கான தடையை நீக்கிய உயா்நீதிமன்றம்.! பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகர் ஆமிா்கானின் மகன் ஜுனைத்தின் முதல் திரைப்படம் வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை குஜராத் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடித்த முதல் திரைப்படமான ''மகராஜ்'' நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

இந்த திரைப்படம் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த வைணவ மத தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான கர்சன்தாஸ் முல்ஜி தொடர்பான அவதூறு வழக்கை மயமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்த திரைப்படம் இந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாக தெரிவித்து சிலர் போராட்டம் மேற்கொண்டனர். மேலும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி, திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த ஜூன் 13ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் படத்தில் இடம்பெறாததை உறுதி செய்த பின்னர் இடைக்கால தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gujarat high court lifted ban Amir khan son film


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->