போச்சே.. ஜி.பி.முத்துவுக்கா இப்படி நடக்கணும்? - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளமான யூடியூபில் தனது வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, சினிமாக்களில் சில கதாபாத்திரங்களிலும் நடித்தார். அதன் பின்னர் பிக் பாஸ் தமிழின் ஆறாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

ஆனால், சில நாட்களிலேயே இவர் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க முடியாமல் வெளியேறினார். இதையடுத்து அவர், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான புது கார் ஒன்றை வாங்கி இருப்பதாகத் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஜி.பி.முத்து தனது காரில் குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்று கொண்டிருந்போது ஒரு பாலத்தின் அருகே காரை நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில், அந்த வழியாக இருசக்கரவாகனத்தில் தனது குழந்தையுடன் வேகமாக வந்த நபர் தெரியாமல் நின்று கொண்டிருந்த காரில் மோதியுள்ளார். இதனால் இவரது காரும், பைக்கும் சேதம் அடைந்துள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இது குறித்து ஜி.பி.முத்து தனது வீடியோவில், “விபத்தில் சம்பந்தப்பட்ட இருவருமே சமாதானமான பிறகும், சம்பவத்தை பார்த்தவர்கள் இதை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்று கருதி பேசினர். ஆனால், எங்களுக்குள் புரிதல் இருந்ததால் நாங்கள் சமாதானமாகப் போனோம்” என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gp muthu new car accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->