கமலுக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய சிவாஜி.?! ஆனால் நடந்த ட்விஸ்ட்.. சுவாரஸ்ய உண்மை.!
gemini ganesan act in the role which was originally created for shivaji ganesan
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் அடையாளம். தன்னுடைய அசாத்தியமான நடிப்பு திறமையால் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு கலைஞர். இவருடன் இணைந்து நடித்தது எல்லா நடிகர்களுக்குமே ஒரு கனவு நினைவான தருணம் தான். நடிப்பின் இமயமான சிவாஜி கணேசன் உலகநாயகன் கமல்ஹாசனுடன் தேவர் மகன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
அதன்பிறகு மற்றொரு படத்திலும் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. சிவாஜி கணேசன் மறைந்து இத்தனை ஆண்டு காலம் கழித்து அதற்கான காரணம் தற்போது வெளிவந்திருக்கிறது.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் மீனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தத் திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. தான் நடிக்கயிருந்த கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன் நடித்தால் நன்றாக இருக்கும் என கமல்ஹாசனிடம் சிவாஜி கணேசன் கூறியிருக்கிறார்.
அதுபோலவே கமல்ஹாசனும் அந்த கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசனையே நடிக்க வைத்திருக்கிறார். ஆம், அவ்வை சண்முகி திரைப்படம் தான் அது. அந்தத் திரைப்படத்தில் விசுவநாதன் கதாபாத்திரத்தில் முதலில் சிவாஜி கணேசன் தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக ஜெமினி கணேசன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
English Summary
gemini ganesan act in the role which was originally created for shivaji ganesan