பிரபல நடிகர் மரணம்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.! இரங்கல் தெரிவித்த முதல்வர்.! - Seithipunal
Seithipunal


மலையாள திரை உலகின் பழம்பெரும் நடிகர் ஜி கே பிள்ளை இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார்.

கேரளா மாநில வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துவந்த நடிகர் ஜி கே பிள்ளை வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 97.

கடந்த 1954ம் ஆண்டு சிநேகசீமா திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானர் . ஆனால், அதற்கு முன்பாக இவர் ராணுவத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருந்தார்.

இராணுவப் பணியை முடித்துவிட்டு, பின்னர் திரை உலகில் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இதுவரை அவர் 325 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சி தொடர்களிலும் ஜி கே பிள்ளை குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இடாவாவில் பிறந்த ஜி கே பிள்ளை இன்று திருவனந்தபுரத்தில் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் மலையாள திரை உலகமும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G K PILLAI DEAD


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->