திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் தேர்தல்.. விஜயின் தந்தையை தோற்கடித்து.. பாக்யராஜ் வெற்றி.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அவர் எதிர்த்து தளபதி விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிட்டார்

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

இதில், இயக்குநர் கே.பாக்யராஜ் 192 வாக்குகளும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று இருந்தனர். இதனையடுத்து கே.பாக்யராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Film Writers Association President Election Bhagyaraj Wins


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->