ரசிகர் ஒருவர் ஹிருத்திக் ரோஷனின் காலில் விழ பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பிரபல ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் அவரது காலில் விழுந்துள்ளார். இதற்கு பதிலுக்கு ரித்திக் ரோஷனும் திரும்பி அந்த ரசிகரது காலில் விழுந்துள்ளார்.

புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ஹிந்தி பதிப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கியுள்ளனர். ஹிந்தியில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும் நடித்துள்ளனர்.

இந்தப் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரை வைத்துப் பார்க்கும்போது, தமிழ் படத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் உருவாகியுள்ளது தெரிகிறது.  

இதனை தொடர்ந்து, நேற்று பிரபல ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகரொருவர் அவரது காலில் விழுந்துள்ளார். பதிலுக்கு ரித்திக் ரோஷனும் அவரது காலில் விழுந்துள்ளார்.

இந்த வீடியோ தொகுப்பு சமீக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும், ரித்திக் ரோஷன் அழகான மனிதர் மட்டுமல்ல நல்ல மனிதர் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fan did to Hrithik Roshans foot ceremony response


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->