ஜெயிலர் 2 படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்...!
famous Telugu actor will join the film Jailer 2
சூப்பர்ஸ்டார் 'ரஜினிகாந்த்' நடிப்பில் மற்றும் பிரபல இயக்குனர் 'நெல்சன்' இயக்கத்தில் 2023-ம் ஆண்டு 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது.பிரபல இசையமைப்பாளர் 'அனிருத்' இசையமைத்த இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2 ம் பாகமான 'ஜெயிலர் 2' உருவாகி வருகிறது. மேலும், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு மீண்டும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் முதல் பாகத்தை போல கேரள நடிகர் 'மோகன்லால்' மற்றும் கன்னட நடிகர் 'சிவராஜ்குமார்' ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவை மற்றும் கேரளாவில் நடைப்பெற்றது.இதற்கிடையே, 'ஜெயிலர் 2 ' படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் 'பாலையா' நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அவர் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
English Summary
famous Telugu actor will join the film Jailer 2