படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட காயம்: வைரலாகும் பதிவு! - Seithipunal
Seithipunal


தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளும் இவர் சமீபத்தில் சிறிது உடல் எடை கூடியதற்காக தினமும் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

ஜிம் பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளில் ஆர்வம் காட்டும் ரித்திகா அண்மையில் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் ரித்திகா சிங்குக்கு படபிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த ரித்திகா, 'இதனை பார்க்கும்போது ஒரு ஓநாயுடன் சண்டையிட்டது போல் தெரிகிறது' எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதனை அடுத்து படபிடிப்பின் போது என்ன நடந்தது என்பதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், 'நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். அங்கே கண்ணாடி இருக்கிறது கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்கள். ஆனால் நான் தான் கேட்காமல் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். 

அதனால் தான் இது நடந்தது' என தெரிவித்துள்ளார். மேலும் நான் இப்போது எந்த வலியையும் உணரவில்லை ஆனால் இதில் சில காயங்கள் மிகவும் ஆழமாக இருப்பதால் நிச்சயம் வலிக்கும் என நம்புகிறேன். 

படப்பிடிப்பில் இருந்து மருத்துவமனைக்கு செல்கிறேன். விரைவில் இது சரியாகிவிடும் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous actress injured shooting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->