விஜய் தேவரகொண்டா நடிப்பில் "ஃபேமிலி ஸ்டார்": ரீலிஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


பரசுராமன் இயக்கத்தில் விஜய் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஃபேமிலி ஸ்டார்''. மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். 

இந்த திரைப்படத்திற்கும் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா லுங்கி அணிந்தபடி தோலில் சாக்குப்பை, வாயில் ஆதார் அட்டை வைத்துக் கொண்டு ஓடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

family star release date announced


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->