உலாவும் கருத்துக்கள் உண்மையானதல்ல... திரௌபதி இயக்குனர் ட்விட்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் கூட்டுத் தயாரிப்பு (Crowd Funding) முறையில் முதல் திரைப்படமாக உருவாகி வருவது திரெளபதி என்ற திரைப்படம். இத்திரைப்படத்தினை பழைய வண்ணாரப்பேட்டை படத்தினை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார்.  சமூக வலைதளங்கள் மூலம் செய்த விளம்பரத்தின் வாயிலாக இந்த திரைப்படத்திற்கு பலரும் தயாரிப்பாளர்கள் ஆகியுள்ளார்கள். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜீத்தின் மைத்துனரும், ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பெண் சிங்கம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக டூலெட் படத்தில் நடித்த சுசீலா நடித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த  ஜூபின் மீண்டும் இயக்குனர் மோகன் கூட்டணியில் இணைந்துள்ளார்.  

திரௌபதி,

மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மறுமலர்ச்சி பாரதி இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் பங்கு பெற்று நடித்துள்ளார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இதுவரை திரையில் காட்டப்படாத, அரியலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமூகத்தில் நிலவும் ஒரு பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் படமாக அமையும் என படம் ஆரம்பித்தது முதல் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். 

சமூகத்தில் நிலவும் ஒரு முக்கியமான பிரச்சனை, கிராமப்புறங்களில் நடக்கும் கதை, அதையும் தாண்டி தமிழ் திரையுலகின் முதல் கூட்டுத் தயாரிப்பு படம் என்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது. இப்படத்துடைய முதற்பார்வை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில்., இப்படத்தின் ட்ரைலர் வரும் ஜனவரி 3 ஆம் தேதியன்று வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்த ட்ரைலருக்கு சில தரப்புகளில் எதிர்ப்புகள் கிளம்பினாலும்., பலதரப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Draupathi, திரெளபதி, draupathi movie, mogan g, director mogan,

மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் இறங்குகிறது திரௌபதி. இளைஞர்களை சுயலாபத்திற்காக மூளைச்சலவை செய்து பெண்களுக்கு எதிராக நாடக காதல் நிகழ்த்த செய்கின்றனர் என்று கூறுவதை காண இயலும். முழு படம் வெளியானால் மட்டும்தான் இந்த படம் குறித்த சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இயலும். இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் படத்தின் மீது வழக்கு தொடுப்பதாகவும், படக்குழுவினருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

காதல் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மற்றும் வசதி வாய்ந்த பெண்களிடம் ஆசையாக பேசி அவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்று அதன் பிறகு, அவர்களது பெற்றோர்களிடம் உங்கள் பொண்ணு எங்க கிட்ட தான் இருக்கு, பணம் கொடுத்துவிட்டு கூட்டிக்கொண்டு போ.. என்று மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பற்றி பலருக்கும் தெரியப்போவதில்லை. பெண்ணை அழைத்து வந்தது போல அப்படியே கொடுத்தால் ஒரு தொகை, கர்ப்பமாக்கி கொடுத்தால் ஒரு தொகை என்று இந்த கும்பலின் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் செல்கிறது. 

இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் போலீஸிடம் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அந்த பெண்ணோ நான் விரும்பி தான் இவன் கூட வந்தேன் என்று சொல்லும். அந்த அளவுக்கு அந்த பெண்ணை மூளைச்சலவை செய்திருப்பார்கள். அப்படி அந்த பெண்ணின் பெற்றோர்கள் பணம் கொடுக்க மறுத்து, போலீஸ் , கோர்ட் என்று சென்றால், அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அந்த பழியை அவரது பெற்றோர் மீது போட்டு ஆணவ கொலை செய்துவிட்டார்கள் என்று திருப்பி விடும் சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதை பற்றியெல்லாம் தெரியாத பெண்கள் ஆசை வார்த்தையில் மயங்கி, மதிகெட்டு அவர்கள் பின் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த பெண்ணும், பெண்ணின் பெற்றோர்களும் தான். 

இதை பற்றி வெளியே சொன்னால் குடும்பம் மானம் பறி போய்விடும் என்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா.? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது தான் அப்பட்டமான உண்மை. இதையெல்லாம் பெண்களுக்கும், பெண்ணை பெற்றவர்களுக்கும் தோலுரித்து காட்டும் வகையில் உருவான படம் தான் திரௌபதி. இந்த படத்தில் ட்ரைலர் வெளியான அடுத்த நொடியில் இருந்தே பற்றி எரிய தொடங்கி விட்டது. இது குறித்து பல தரப்பில் இருந்து பல விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பலபேரை ஆட்டம் காண வைத்து விட்டால் திரௌபதி. மேலும்., இந்த படத்திற்கு பலரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இருப்பினும் சில திரையுலக நட்சத்திரத்துடன் இயக்குனர் மோகன் ஜி எடுத்துள்ள புகைப்படத்தை தற்போது பதிவு செய்து., திரௌபதி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக புகைப்படங்கள் வெளியான நிலையில்., இதனை மோகன் ஜி மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் "' வதந்திகளை நம்பாதீர்.. #திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

draupathi mogan g director speech about ajith wish about trailer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->