இரண்டாம் நாளில் டபுள் மடங்கு வசூல்.. – விஷ்ணு விஷால் ‘ஆர்யன்’ படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்!
Double collection on the second day Vishnu Vishal film Aryan box office collection
பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி வெளியான “ஆர்யன்” திரைப்படம், வெற்றிநடை போட்டு வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகள் தேர்வு செய்வதில் தனித்த பாதையை வகுத்து வரும் விஷ்ணு விஷால், தனது சொந்த நிறுவனம் விவி ஸ்டூடியோஸ் மூலமாக இப்படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில், சுமார் ₹30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், கிரைம் த்ரில்லர் வகையில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
படத்தில் செல்வராகவன் நடித்த தொலைக்காட்சி லைவ் ஷோவில் நடக்கும் சம்பவத்தால் தொடங்கி, தொடர் கொலைகளின் மர்மத்தை விசாரிக்கும் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கியமான கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க பிரமாண்டமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
‘ராட்சசன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கிரைம் த்ரில்லர் வகையில் வந்துள்ள “ஆர்யன்”, அந்த படத்தின் சாயல் இல்லாமல் தனித்து நிற்கும் கதையம்சத்தாலும், சமூகத்தை சிந்திக்க வைக்கும் மெசேஜாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
வெளியீட்டின் முதல் நாளில் ரூ. 1.17 கோடி வசூல் செய்த “ஆர்யன்”, இரண்டாம் நாளில் அதனை இரட்டிப்பாக உயர்த்தி, சுமார் ₹2 கோடி இந்தியா வசூலை எட்டியுள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 3.73 கோடி வசூல் செய்துள்ள இந்த படம், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களின் காரணமாக, வசூலில் மேலும் ஏற்றம் காணும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, படத்தின் தெலுங்கு பதிப்பு நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் “ஆர்யன்” படம் விஷ்ணு விஷாலின் மீண்டும் வந்த மாஸ் கம்பேக் என பேசப்படுகிறது.
English Summary
Double collection on the second day Vishnu Vishal film Aryan box office collection