பிரபல இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் காலமானார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில், ’ஆனந்தம்’, ‘ரன்’, ‘சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட கமர்ஷியல் படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் படங்கள் இயக்குவதுடன், ‘திருப்பதி பிரதர்ஸ்’ என்ற பெயரில் படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த லிங்குசாமி கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர்.

இவருக்கு இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும் உண்டு. இதில், லிங்குசாமியின் இரண்டாவது அண்ணன் கேசவன் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவர் லிங்குசாமியின், ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தார். 

கேசவன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. மறைந்த கேசவனின் மகன் வினோத், ‘கோலி சோடா 2’ படத்தில் மூன்று நடிகர்களில் ஒருவராக நடித்துள்ளார். 

மேலும், லிங்குசாமி தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘நான் தான் சிவா’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director lingusamy brother kesavan passed away


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->