இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்.! - Seithipunal
Seithipunal


சினிமா உலகில் கடந்த 1965-ம் ஆண்டு "ஆத்ம கவுரவம்" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.விஸ்வநாத். இவர் இயக்கிய இந்த முதல் படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருது உள்ளிட்டவற்றை பெற்றார். 

இதைதொடர்ந்து, அவர் தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா மற்றும் உத்தம வில்லன் உள்ளிட்ட பல முன்னணி திரைபிரபலங்களின் படங்களிலும் நடித்துள்ளார். 

மேலும், இவருக்கு சினிமாவின் மிக உயரிய விருதான "தாதா சாகேப் பால்கே" விருது மற்றும் "பத்ம ஸ்ரீ'விருது" உள்ளிட்டவற்றை வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. அத்துடன், ஏழு முறை நந்தி விருது, ஐந்து முறை தேசிய விருது உள்ளிட்டவற்றை வென்றவர்

இவர், வயது மூப்பின் காரணமாக சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று நள்ளிரவு ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். 

இவருடைய இந்த மறைவு திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்தது. மேலும், அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director ks viswanath passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->