தல 'தோனி' தயாரிக்கும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தது. அத்துடன் இவரது முதல் திரைப்படம் தமிழில் தான் என்று கூறப்பட்டது.

இதில் முதல் முதலில் நடிகர் விஜய்யை வைத்து தோனி படம் தயாரிப்பாளர் என்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டது. சூர்யா, அஜித் என்று பல முன்னணி நடிகர்களின் பெயர் அடிபட்டது.

இதனிடையே தோனி தயாரிக்கும்  படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த படத்திற்கு LGM (Let's Get Married) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவானா மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.

இந்த நிலையில் MS தோனி தயாரிக்கும் முதல் படமான LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தோனி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni production LGM movie 1st look poster tomorrow release


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?




Seithipunal
--> -->