தோனி தயாரிக்கும் ஹரிஷ் கல்யாணின் எல்.ஜி.எம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் விவசாயம், கல்வி ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்வது, அத்துடன் விளம்பரப் படங்களில் நடிப்பது என எப்போதும் பிசியாக இருப்பார். இந்த நிலையில் திரைத்துறையிலும் தோனி கால் பதித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் ஹரீஷ் கல்யாண் மற்றும் இவானா இணைந்து நடிக்கும் "Let’s get married" என்ற எல்.ஜி.எம் படத்தை தயாரிப்பதாக அறிவித்தனர். தோனிக்கும் சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனி பிணைப்பு உள்ளதால் தனது புரொடக்ஷனில் உருவாகும் முதல் தமிழ் படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் படப்பிடிப்பும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில் தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமான எல்.ஜி.எம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni production HarishKalyan LGM movie releases on July28


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->