"புடிச்சிது.. இப்ப புடிக்கல" தர்ஷா குப்தாவின் எல்லை மீறும் புகைப்படத்தை கண்டு, மனக்குமுறலை வெளியிட்ட ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜி தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தா. இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் " முள்ளும் மலரும் " என்ற தொடரிலும், சன் தொலைக்காட்சியில் " மின்னலே " என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் " செந்தூரப்பூவே " என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த மூன்று தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தொடர்கள் மூலமாக மக்களிடையே பிரபலமாகாமல் இருந்து வந்தாலும், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். சமூக வலைத்தளங்களின் துவக்கம் முதலாகவே தர்ஷா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். 

ஒவ்வொரு முறை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், நாளாக நாளாக தனது கவர்ச்சியை கூட்டிக்கொண்டே போகும் தர்ஷா குப்தாவின் சமீபத்திய புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கமெண்ட்டில் கவிதை மழையை பொழிந்து வருகின்றனர். தனது வாளிப்பான இடுப்பு தெரிய அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை கண்டு மயங்கியவர்கள் இன்னும் எழவே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில், நடிகை தர்ஷா குப்தாவின் சமீபத்திய புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர் புடிச்சுது.. இப்போ புடிக்கல என்ற கமெண்ட் செய்துள்ளார். மேலும், பலரும் தர்ஷா குப்தாவின் டிரடிஷனல் லுக் தான் எங்களுக்கு வேண்டும் என்றும், அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். தர்ஷா குப்தா கவர்ச்சி காட்டுவதை அவருடைய ரசிகர்கள் விரும்பவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharsh kupta Instagram post fan comments


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal