அடேங்கப்பா தெய்வமகள் சத்யாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா!!  - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகவுள்ளார். டிவி சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது வைபவ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அறிமுக இயக்குநர் எஸ்.ஜி சார்லஸ் இயக்கும் . நிதின் சத்யா இந்தப் படத்தை தயாரிக்க, இப்படத்தில் பூர்ணா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வாணி போஜன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஜயதேவரகொண்டா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் வாணி போஜன் ஜோடியாக இயக்குநர் தருண் பாஸ்கர் நடிக்கிறார். சென்னையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

இந்த இரண்டு படங்களின் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வாணி போஜன் மற்றொரு படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார். நிரோஜன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொம்மு லட்சுமி மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்த படத்தை அருண் பாண்டியனின் ஏ-பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாக உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deivamagal sathya acting in cinima


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal