'டி54’ ஷூட்டிங் ஓவர்...! கேக் வெட்டிய தனுஷ்-மமிதா பைஜு...! - ரசிகர்கள் உற்சாகம்
D54 shooting over Dhanush and Mamitha Baiju cut cake Fans thrilled
‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, நடிகர் தனுஷை வைத்து இயக்கிய அவரது 54வது திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
தற்காலிகமாக ‘டி54’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

மேலும், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளதால், படத்தின் நட்சத்திர பட்டாளம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை குறிவைத்து திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ‘டி54’ படத்தின் முழு படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை படக்குழு உற்சாகமாக கொண்டாடியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் மற்றும் மமிதா பைஜு இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட தருணங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த கொண்டாட்டக் காட்சிகள், ‘டி54’ மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
English Summary
D54 shooting over Dhanush and Mamitha Baiju cut cake Fans thrilled