கொரோனா பிடியில் இருந்து விடுபட்டதும், ராஜமௌலி வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஏழை, எளிய மக்கள், பணக்காரர்கள், மக்களுக்காக பணியாற்றும் அதிகாரிகளையும் தொடர்ந்து பாதித்து வருகிறது. இதனால், மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். 

சமீபத்தில், பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு கொரோனா உறுதியாகியது. கடந்த மாதம் 29 ஆம் தேதி, அவர்களின் குடும்பத்தினருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. 

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தாங்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தி கொண்டார்கள்.

இந்நிலையில், மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ராஜமௌலிக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து, ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தாவது,, தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் முடிந்தது. தற்போது, அறிகுறிகள் இல்லை. 

இதனால், மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. மேலும், பிளாஸ்மா நன்கொடை வழங்க மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதையடுத்து, பிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona negative in rajamouli


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal