டி.எஸ்.ஆர் சீனிவாசனின் இந்த உருவத்திற்கு இதுதான் காரணமா.? துயரங்களை பகிர்ந்த அயலி நடிகர்.!
comedy actor tsr share about his life struggles and sucess in cinema
தமிழ் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் ஒரிரு காட்சிகளில் மட்டும் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற கலைஞர்களில் ஒருவர் தான் டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன். தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அயலி இணையதள தொடரில் மிகச் சிறந்த கதாபாத்திரம் ஒன்றில் நடித்து பெயர் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் தன்னைப் பற்றிய சுவாரசியமான கருத்துக்களையும் தான் கடந்து வந்த பாதை பற்றிய நிகழ்வுகளையும் பகிர்ந்து இருக்கிறார். வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய அவர் சினிமா புத்தகங்களை படித்ததன் மூலம் ஏற்பட்ட ஆர்வத்தினால் சினிமாவில் நடிக்க வந்ததாக தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்ததாகவும் சில திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவராக நின்று நடித்ததாகவும் கூறியிருக்கிறார்.
தான் இன்று இருக்கும் உயரத்தை ஏற்றுவதற்கு 70 படங்களை கடந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார் டிஎஸ்ஆர். 300 ரூபாய் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதித்ததாக தெரிவித்தார். சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் மிகவும் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டதாக தெரிவித்த அவர் தனது விடாமுயற்சியால் படிப்படியாக உயர்ந்து இன்று ஒரு நல்ல நிலையை அடைந்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் சினிமாவில் தான் உருவ கேலியை இதுவரை சந்தித்ததில்லை எனக் கூறிய அவர் பள்ளி நாட்களில் சக நண்பர்களால் உருவ கேளிக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார். என்னுடைய உருவம் தொடர்பான குறைபாடை உடைப்பதற்காக நன்றாக படித்து பள்ளியில் முதல் மாணவனாக விளங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் பிறக்கும் போது தனது தந்தைக்கு வயது 35, தாய்க்கு 15 வயது தான் என தெரிவித்துள்ள அவர் பிறகு எப்படி அவர்களின் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்? எனவும் கேள்வி எழுப்பினார். இவரது சித்தப்பா தான் சினிமாவில் வருவதற்கு துணையாக இருந்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
English Summary
comedy actor tsr share about his life struggles and sucess in cinema