இன்றைய வரலாறு.. பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர், நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்த பெருமைக்குரியவருமான நாகேஷ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் பிறந்தார்.

இவர் 1959ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் அறிமுகமானார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் கதாபாத்திரத்தில் தோன்றினார். அது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது.

இவருக்கு 1974ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. இவர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மறைந்தார்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

1953ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்தமயி கேரளாவில் பிறந்தார்.

1905ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தினத்தந்தி நாளிதழை தொடங்கிய சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் பிறந்தார்.

1972ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி இந்திய கணிதவியலாளர் எஸ்.ஆர்.ரங்கநாதன் மறைந்தார்.

 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.

1905ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதல் முறையாக ஆற்றலுக்கான சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Comedy actor nagesh birthday today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->