லாக்டவுனால் மின்சார கட்டணம் அதிக வசூலா..?! சினிமா பிரபலங்கள் ட்விட்டரில் கூச்சல்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக ஒவ்வொரு வீடாக சென்று மின்சார பயன்பாட்டு அளவை கணக்கிட முடியாது என்ற காரணத்தால் முந்தைய மாத கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று கூறி அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

அதன்பின்னர் தற்போதைய கட்டணங்களுடன் முன்னர் செலுத்திய கட்டணங்களை கழித்து மீத தொகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டது. இதுகுறித்து பயனாளர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, ஊரடங்கு காலத்தில் அதிக மின்சார கட்டணம் வழங்கப்படுவதாக டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன்பின்னர் மின்சார வாரியம் இது குறித்து அவரிடம் விளக்கம் அளிக்க உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கினார். நீக்கிவிட்டு வருத்தமும் தெரிவித்தார். 

இரண்டு நாட்களுக்கு முன்பாக கோ பட கதாநாயகி கார்த்திகா மும்பையிலும் அதிக மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக ட்விட்டரில் கோபமாக பதிவிட்டிருந்தார். இதுபோல பலரும் டுவிட்டரில் மின்சார கட்டண உயர்ந்திருப்பதாகபதிவு போட்டு உள்ளனர். 

தெலுங்கு மற்றும் இந்தி நடிகையான ஷ்ரதா தாஸ், நடிகை டாப்ஸி உள்ளிட்டோரும் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cine families tweet about electricity bill 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->