'சந்திரமுகி - 2' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்? - Seithipunal
Seithipunal


பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகியுள்ளது. 

சந்திரமுகி திரைப்படம் திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றியையும் அதிகமான வசூலையும் குவித்தது. 

தற்போது அதன் இரண்டாம் பாகம் லைகா ப்ரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி-2 படத்திற்கு ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் கங்கனா ராணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என பட குழுவினர் தெரிவித்திருந்தனர். 

ஆனால் இந்த படத்தின் வெளியிட்டு தேதி செப்டம்பர் 28 ம் தேதிக்கு மாற்ற உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

வருகின்ற 15ஆம் தேதி திரைக்கு வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandramukhi 2 release date change


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->