ஹைதராபாத் சென்ற 'சந்திரமுகி 2' படக்குழு! எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. 

சந்திரமுகி திரைப்படம் திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்தது. 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். 

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கங்கனா ராணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில் பட குழுவினர் படத்தின் பிரமோஷன் பணிக்காக ஹைதராபாத் சென்றுள்ளனர். நடிகை கங்கனா ரனாவத், நடிகர் லாரன்ஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் புகைப்படங்களை பட குழு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandramukhi 2 film crew went to Hyderabad


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->